யாழ் மாநகரின் பாதீடு தோல்வி – கூட்டமைப்பு – முதல்வர் அணியினர் இடையே கடும் வாக்குவாதம்!

Wednesday, December 21st, 2022


யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் ஈபிடிபி வெளிநடப்பு செய்தது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு முதல்வர் மணிவண்ணனின் ஆதரவு அணியினர் மட்டும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனடிப்படையில் சபைக்கு பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்களுள் பாதீட்டுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
இன்னிலையில் முதல்வர் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 7 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்னிலையில் தோற்கடிக்கப்பட்ட பாதீடு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு  எதிர்வரும் 14 நாள்களின் பின் சபையில் சமர்ப்பிக்கப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டது.

முன்பதாக ஏற்கனவே ஒருதடவை யாழ் மாநகரின் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் அன்றைய முதல்வராக இருந்த ஆர்னோல்ட் பதவி இழந்திருந்ததுடன் இன்றைய முதல்வர் மணிவண்ணன் பதவிக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: