அரிசி மீதான இறக்குமதி வரி குறைப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, January 31st, 2017

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி விதிப்பை தற்போதைய விதிப்பனவின் தொகை நிர்ணயத்திலிருந்து குறைத்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதான தகவலை நிதியமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விதிப்பவாக இருந்து வரும் 15ரூபா விசேட வரியை மேலும் 5ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் தெரிவித்துள்ளது தற்போது இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளான சிவப்பரிவி, நாட்டரிசி, மற்றும் சம்பா ஆகியவற்றின் மீதான வரி விதிப்பனவே குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய அரிசி வகைகளுக்கான வரி குறைக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்தது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamil-Daily-News_58800470830

Related posts: