யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழப்பு!

Saturday, October 2nd, 2021

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வைத்திய சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

000

Related posts:


கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாந...
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி - தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத...