யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு – எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் அங்குரார்பணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.
உணவுப் பண்டங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ அனுமதி பெற இதுவரை வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், இதற்கான அலகு யாழ்ப்பாணத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி யாழ். சிறைச்சாலையில் எட்டுக் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட...
மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி - தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்...
|
|