யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 746 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் கடந்த வருடம் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம் வெளிநோயாளர் பிரிவில் 800 பேரும் பல்வேறு கிளினிக்குகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
கடந்த வருடத்தில் பல்வேறு கிளினிக்குகளுக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளார்கள். 5 ஆயிரத்து 746 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் நோயாளர்களின் வசதிகளுக்காக 2018 இல் மேலதிக வசதிகள் செய்யப்படவுள்ளன எனவும் கூறியுள்ளார்.
Related posts:
இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம்!
தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல்துறை!
|
|