தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயனக் கூடங்கள் தொடர்பில் விசாரணை!

Monday, July 10th, 2017

டெங்கு காய்ச்சலுக்கான இரத்த பரிசோதனைக்குரிய கட்டணங்களை குறைக்குமாறு சுகாதார அமைச்சு வழங்கிய அறிவுறுத்தலை சில தனியார் வைத்தியசாலைகளும் இரசாயன கூடங்களும் மீறியிருப்பதாக சுகாதாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக  அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.டெங்குக் காய்ச்சலுக்கான முழுமையான இரத்த பரிசோதனை கட்டணம் ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண இரத்த பரிசோதனைக்குரிய கட்டணம் 250 ரூபாவாகவும் அமைய வேண்டும் என்று அமைச்சர் கடந்த மாதம் அனைத்து தனியார் வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை தனியார் வைத்தியசாலைகள் அறவிடுவதாக முறைப்பாடுகள் நோயாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.இது தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும்  சுகாதார போஷாக்கு  மற்றும் சுதேச  வை வத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

Related posts: