இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம்!

Thursday, May 19th, 2016

ஆபிரிக்க நாடான அங்கோலா நாட்டில் பரவியுள்ள ஒரு வகை காய்ச்சல் இலங்கையிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காய்ச்சலைப் பரப்பும் ‘ஈடிஸ்’நுளம்புகள் இலங்கையிலும் காணப்படுவதால் குறித்த  காய்ச்சல் பரவும் வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும்குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்தக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஊசி மருந்தினை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெற்றுக் கொள்வது கட்டாயமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 9 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த ஊசி மருந்தினை ஏற்றிக் கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு மக்களை கோரியுள்ளது.

இந்த ஊசி மருந்தினை இதுவரை ஏற்றிக் கொள்ளாதவர்கள் பொரளையில் உள்ள வைத்தியபரிசோதனை நிலையத்திற்கு வார நாட்களில சென்று இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஊசியினை ஏற்றிக்கொண்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் இந்தகாய்ச்சலிருந்து பூரணமாக சுகமடையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதனால் வாழ்நாள் பூராகவும் குறித்த காய்ச்சலில் இருந்து பாதுகாப்புகிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும...
நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானது - சபாநாயகர்...