யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை!

Wednesday, March 3rd, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என வடபிராந்திய குருதி மாற்று பிரயோக வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது கறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

அனைத்து வகையான இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா தொற்று காரணமாக நடமாடும் இரத்ததான முகாம்களை நடத்த முடியாமல் போனதால் நாடளாவிய ரீதியில் இரத்தம் சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், விபத்துக்களில் பாதிக்கப்படுவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு வழங்குவதற்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது.

அதனடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடையவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும் என்றும் தேசிய குருதி மாற்று பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முற்பதிவுகளை செய்து குருதியை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: