மின்சார தூண்களுக்கு அருகில் வீடு கட்டுவதற்கு தடை!

Tuesday, March 21st, 2017

மின்சார தூண்களுக்கும், கட்டடங்களுக்கும் இடையில் காணப்பட வேண்டிய குறைந்த பட்ச தூரம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டடம் மற்றும் மின்சார தூணுக்கு இடையில் செங்குத்து மற்றும் கிடைமட்ட இடைவெளிகள் தொடர்பில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார தூணின் மின்னழுத்தம் ஆயிரத்திற்கு குறைவென்றால் அவ்வாறான தூண்கள் உள்ள கட்டங்கள் வரை காணப்பட வேண்டிய குறைந்தபட்ச செங்குத்து இடைவெளி 2.4 மீற்றராகும்.

குறைந்தபட்ச கிடைமட்ட இடைவெளி 1.5 ஆகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சார தூணின் மின்னழுத்தம் அதிகமாக காணப்படும் போது கட்டடம் காணப்பட வேண்டிய தூரமும் அதிகரிக்கும்.

புதிய நடைமுறைக்கமைய உரிய பத்திரங்களின்றி கட்டடம் நிர்மாணிப்பது சட்டவிரோத செயல் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய புதிய நிர்மாணிப்புகளுக்கான அபிவிருத்தி உரிமம் வழங்கும் போது மின்சார தூண் மற்றும் குறித்த நிர்மாணிப்புக்கு இடையில் உள்ள திறன் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நடைமுறைக்கமையில் நிர்மாணிப்புகளின் போது இலங்கை மின்சார சபை அல்லது இலங்கை மின்சக்தி தனியார் நிறுவனங்களிடம் பாதுகாப்பு சான்றிதழ் ஒன்று பெற்றுக் கொள்வது அவசியமாகும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts:


20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
யாழ் மருத்துவர்களின் முயற்சியால் துண்டிக்கப்பட்ட கை ஒன்பதரை மணி நேர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது!...
ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் - நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!