அதிகரிக்கும் காணிப் பிணக்குகளால் ஏனைய பிரச்சினைகள் முடக்கப்படுகின்றன – சுந்தரம் அருமைநாயகம்!

Friday, June 10th, 2016

கிளிநொச்சி மாவவட்டத்தில் காணப்படுகின்ற அதிகளவான காணிப்பிணக்குகளால் ஏனையப்பணிகளை தம்மால் மேற்கொள்ள முடியாதுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்.

குறித்த தொடர்ந்தும் நிகழ்வில் பேசிய அவர் –

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு காணிப்பிணக்குகள் காணப்படுகிறது. நாளாந்தம்பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்திற்கு வரும் காணிப்பிணக்குகளைஅதிகாரிகளால் தீர்ப்பது என்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. இந்த அதிகரித்தகாணிப்பிணக்குகள் காரணமாக எம்மால் ஏனைய பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.அதிகரித்த காணிப்பிணக்குகள் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு பெரும் சுமையாக உள்ளது.

காணிப்பிணக்குகள் என்பது சட்டத்திற்கு உட்பட்டது. எனவே அதற்கு சட்டரீதியானதீர்வுகளையே காணவேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 99 வீதமான காணிகள்அரச காணிகள், காணிகளில் உள்ளவர்களுக்க எவ்வித ஆவணங்களும் இல்லை, அல்லதுஆவணங்களை தொலைத்திருப்பார்கள், அல்லது ஒரு காணிக்கு பலர் உரிமைகோருகின்றார்கள்.

இப்படி பல பிரச்சினைகள் மாவட்டத்தில் உள்ளன எனத் தெரிவித்தஅரச அதிபர், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்த பிரதேசமாக காணப்படுகின்ற கரைச்சி பிரதேச செயலகபிரிவிலேயே அதிகரித்த காணிப்பிணக்குள் காணப்படுகிறது இந்த பிணக்குளை எந்தஅதிகாரிகளாலும் இலகுவாக தீர்த்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Related posts: