யாழ்.நகரில் 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும் – யாழ்.மாநகர ஆணையாளர்!
Tuesday, October 18th, 2016
யாழ்.நகரிலுள்ள 44 குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளுக்கு முன்பாக குளங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 14 குளங்கள் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்குளங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன் முன்னேற்பாடாக நீர்வளச் சபையினால் குளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுப் பணிகளின் பொது முதற்கட்டமாக 14 குளங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஏனைய குளங்களின் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இந்த 44 குளங்களும் மக்களை கவரும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Related posts:
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் - எ...
திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


