யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து குறித்து பயணிகள் குற்றச்சாட்டு!

Saturday, February 11th, 2017

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிகளை ஏற்றிய பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி பொலிஸாரைக் கண்டு மிக மோசமாக பேருந்தைச் செலுத்தி பயணிகளை அலைக்கழித்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறித்த பேருந்து குளிரூட்டப்பட்டதாகக் கூறி 1,3000 ரூபா ஒவ்வொரு பயணியிடமும் பெறப்பட்ட போதும் மண்ணெண்ணெய் மணமே மூக்கைக் குடைந்து சுவாசிக்க முடியாத நிலையும் காணப்பட்டதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் பயணிப்பதற்காக முற்பதிவு முகவர்கள் 7.30 மணிக்குப் பேருந்த புறப்படும் என்று சிலருக்கு அறிவித்தனர். வேறு சில பயணிகளுக்கு 8.30மணிக்குப் பேருந்து புறப்படும் என்றும் அந்த நேரத்திற்கு குறிக்கப்பட்ட இடங்களில் நிற்குமாறும் கூறியுள்ளனர்.

ஆனால் நேற்றிரவு 10.15 மணிக்குப் பின்னர் தான் பயணிகளை ஏற்றப் புறப்பட்டுள்ளனர். அதுவும் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் அங்குள்ள சிறு வீதிகளுடாக பேருந்து நுழைந்து பயணித்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் பொலிஸார் குறித்த பேருந்தைப் பரிசோதிக்க மற்பட்டனர். அதன் போதே குறித்த பேருந்தின் சாரதி மிக மோசமாக சாரத்தியம் செய்தார். பயணிகள் பயங்கரமான நிலையை உணரும் அளவுக்கு அவர் மிக மொசமாக சாரத்தியம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

Untitled-1

Related posts: