யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்வு
Friday, May 26th, 2017
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை நிகழ்வு-2017 நாளை சனிக்கிழமை(27) நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் காலை-09 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதன் போது வேலைவாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆகவே, தொழில் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறீ தெரிவித்துள்ளார்.
Related posts:
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!
யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!
|
|
|


