யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் நாளை மின்தடை !

Saturday, May 27th, 2017

யாழ். குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, பருத்தித் துறை வீதியிலிருந்து கல்வியங்காட்டுச் சந்தையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, சட்டநாதர் வீதி, செம்மணி வீதி, கச்சேரி-நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி,பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்பாள் வீதி, புறுடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் லேன், புங்கன்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிலிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ-09 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதியில் புகையிரதக் கதவை வரை, முள்ளி நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு, Cer- Nor பவுண்டேசன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மாகாவித்தியாலயம், Sos சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங் பி.எவ்.சி, நாயன்மார்க்கட்டு Carlton Sports NetWork(CSN), பனை வள ஆராய்ச்சி நிலையம், சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், கொடிகாமம்- கச்சாய் வீதி, நெடுந்தீவு தேசிய நீர் வழங்கல் சபை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் - ஈ.பி.டி.பி. உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!  
மக்கள் தொகையில் வீழ்ச்சி - யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று குறைக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழ...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவ...