ஜனாதிபதி தேர்தல்: இரண்டாயிரம் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, October 31st, 2019
கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வன்முறை தொடர்பாக 2 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 117 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏனைய முறைப்பாடுகள் 5 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதியிலிருந்து நேற்று வரையான காலப்பகுதியில் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!
அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் - வர்த்தக அமைச்சர் பந்துல க...
பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது - இராஜாங்க அமை...
|
|
|


