யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை
Sunday, May 14th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொடிகாமம் கச்சாய் வீதி, பனைவள ஆராய்ச்சி நிலையம், சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், நுணாவில், கைதடி,நாவற்குழி, மறவன்புலவு, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக் கண்டி, கேரதீவு வீதி, அறுகு வெளி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை!
துருக்கி முன்னாள் பிரதமர் - பிரதமர் சந்திப்பு!
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறையானால் மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க ...
|
|
|


