தடை நீக்கத்தின் பின்னரான ஒரு மாதத்தில் 3000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்!

Monday, November 21st, 2016

இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீன் ஏற்றுமதி மூலம் ஒரு மாதத்தில் 3000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, மீன்பிடிதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஜூலை 22ம் திகதி நீக்கப்பட்டது.  இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாத்திரம் நாட்டில் இருந்து 36,000 மெற்றிக் தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  இவற்றினால் பெறப்பட்ட வருமானம் 11,500 மில்லியனுக்கு அதிகம் என, மீன்பிடிதுறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

1163953793East

Related posts: