மத்திய வங்கி தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி!

Thursday, November 3rd, 2016

 

மத்திய வங்கியின் முறிவிற்பனை முறைக்கேடு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மகரகம பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் இன்று(03) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் முறிமுறைகேடு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமால் அந்த விடயம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.பிணை முறிப் பத்திர கொடுக்கல், வாங்கல் மற்றும் அதில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறியும் விடயத்தில் அரசியல் அதிகார தரப்பு தலையிடாது.

பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதற்காக, தான் இந்த விடயம் தொடர்பில் எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முறைக்கேடு தொடர்பில் சட்டஆலோசனை கிடைத்த பின்னர் தாம், சுயாதீன நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

mk

 

Related posts: