வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்றுமுதல் நடைமுறைக்கு!
Tuesday, March 15th, 2022
அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் என்பவற்றின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது.
அத்துடன் அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையின் கடலோர பாதுகாப்பு பலவீனமாகவுள்ளது - அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிப்பு!
உயர்தர பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை...
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை - தேசிய ...
|
|
|


