டெங்கு நோய்த் தாக்கத்திற்கு 90 பேர் பலி – 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Monday, May 8th, 2017

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகி இவ்வாண்டில் இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின்  புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கொழும்பிலும் ஏனைய சிலபகுதிகளிலும் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழையை அடுத்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்புமாவட்டம் மட்டுமன்றி கம்பஹா, களுத்துறை, குருநாகல், காலி, மாத்தறை, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியமாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோய்க்கு இலக்காகி இதவரையில் 90 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தாம் வாழும் வீட்டையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தம் சுகாதாரமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சுகாதாரமற்ற முறையில் தமது சூழலைவைத்திருப்போர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், குறிப்பாக அவர்கள் மீது அபராதத் தொகை அறவிடப்படுமென்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அபராதத்தொகை தொகையாக 25 ஆயிரம் ரூபாமுதல் 50 ஆயிரம் ரூபாவரையில் அறவிடப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் டெங்குநொய்த் தாக்கத்திற்கு கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் சரியான சுகாதார வழிமுறையை பின்பற்றாத பட்சத்தில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதனால் மரணங்கள் ஏற்படக் கூடியசாத்தியங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: