தாதியர்களின் கற்கை நெறி தரமுயர்த்தப்படும் – உறுதி அளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Sunday, September 13th, 2020

தாதியர்களுக்கென தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்று வருட டிப்ளோமா கற்கை நெறியை நான்கு வருட பட்டப்படிப்பாக மாற்றவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தாதியர்களுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் சுகாதார சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே தாதியர்களின் பயிற்சிப்பாடசாலை தரமுயர்த்தப்படவுள்ளது. அதேபோன்று தாதிய படசாலை கட்டட வசதி, ஆய்வுகூட வசதிகள், ஆங்கில மொழி போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகள் களையப்படும்.

எனவே உலக புகழ்பெற்ற தலைமுறை தாதியர்களை உருவாக்குவதன் மூலமும் நாட்டின் இலவச சுகாதார சேவை பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.

Related posts: