யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் புகையிரதநிலைய அதிபர் தெரிவித்துளள்ளார்
இதுவரை காலமும் காங்கேசன்துறையிலிருந்து காலை புறப்படும் யாழ்.தேவி புகையிரதமும், காங்கேசன்துறையிலிருந்து மாலை வேளையில் புறப்படும் தபால் புகையிரதமும் யாழ்ப்பாணம் வரை இணைப்புச் சேவையாக நடைபெற்று வந்தது.
இதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து பயணிக்கும் பயணிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் புகையிரத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் பயணிகள் நன்மையடைந்துள்ளனர்.
Related posts:
இணையத்தின் மூலம் கடவுச் சீட்டுக்களை அனுப்ப நடவடிக்கை!
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - இளைஞன் பலி!
மின்கட்டண அதிகரிப்பு ஜனவரி 15 முதல் அமுலாகும் - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
|
|