மீனவரின் உயிரிழப்பு தற்செயலான விபத்து – கடற்படைப் பேச்சாளர்!
Saturday, March 25th, 2017
மன்னார்,விடத்தல் தீவில் மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒரு விபத்து என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தினகரனுக்குத் தெரிவித்தார். சம்பவத்தின்போது மீனவர் தெப்பம் ஒன்றில் இருந்தபடியே மீன் பிடித்துள்ளார்.
வேகமாகச் சென்ற கடற்படையினரின் படகு இந்த தெப்பத்தில் மோதியதில் தெப்பம் கவிழ்ந்து மீனவர் கடலுக்குள் விழுந்துள்ளார். கடற்படையினர் மீனவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடத்தல் தீவில் மீனவரின் படகை கடற்படையினரின் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் அது தற்செயலாக இடம்பெற்ற விபத்து எனக்கூறினார்.
Related posts:
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...
விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி - தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பேராசிரியர்...
|
|
|


