விதிகளை மீறுவோருக்கு தண்டம் 25,000 ரூபாவா அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Sunday, November 20th, 2016

வீதி விதிகளை மீறுவதற்கான தண்டமாக 2500 ரூபாவாக அல்லாமல் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளர்.

வணிகமயமாக்கல் மற்றும் வீதி அபிவிருத்திகள் காரணமாக இடம்பெறும் விபத்துக்களின் அளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இந்த விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதி சட்ட கட்டமைப்பு ஒன்று அவசியம் என்று அமைச்சர் கூறுகின்றார். பாதை மாறுவதில் இருந்து பாதை விபத்துக்கள் வரை சட்ட விதிகள் அவசியமாகின்றது என்று அமைச்சர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்காக ஒழுங்கு முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், ஒழுங்கு முறை அற்ற நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.. வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

849797881Rajitha

Related posts: