யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தரைக் காணவில்லை
Saturday, June 24th, 2017
யாழ். அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த-19 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் நேற்று வெள்ளிக்கிழமை(22) அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி குடும்பஸ்தர் அச்சுவேலிப் பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் நடத்துனராகக் கடமையாற்றி வரும் நிலையில் கடந்த-19 ஆம் திகதி பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இராசையா பாலேஸ்வரன்(வயது-40) என்பவரே இவ்வாறு காணாமற் போனவராவார்.
Related posts:
தாய்நாட்டிற்காக சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் தேசிய விருது விழா!
கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி மருத்துவமனையில் 40 இந்தியர்கள் உட்பட 50 க்கும் அதிகமான வெளிநாட்டவ...
போராட்டங்களினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது - எதற்கும் தயார் என பெரமுன அறிவிப்பு!
|
|
|


