யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தரைக் காணவில்லை
Saturday, June 24th, 2017
யாழ். அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த-19 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் நேற்று வெள்ளிக்கிழமை(22) அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி குடும்பஸ்தர் அச்சுவேலிப் பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் நடத்துனராகக் கடமையாற்றி வரும் நிலையில் கடந்த-19 ஆம் திகதி பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இராசையா பாலேஸ்வரன்(வயது-40) என்பவரே இவ்வாறு காணாமற் போனவராவார்.
Related posts:
பல்கலை.மாணவர் படுகொலை: வட, கிழக்கில் வழக்கு வேண்டாம் வேறு நீதிமன்றுக்கு மாற்ற கோரிக்கை!
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் வழங்கும் - ரொய்ட்டர் செய்திச்சேவை தெர...
|
|
|


