பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Friday, January 11th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் முகவர் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு - அமைச்சர் ரோஹித்த அபேகுண...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
வெளிநாட்டு கையிருப்பு 3.6 டொலர் பில்லியன்களாக உயர்ந்துள்ளது - அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவிப்பு!
|
|
|


