பரீட்சை சான்றிதழ் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Tuesday, October 6th, 2020

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று சமூகமட்டத்தில் பரவத் தொடங்கியதனையடுத்து பொது மக்களை தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை சான்றிதழ்களை ஒன்லைன் முறை மூலம் கோரலாம் மற்றும் பெறலாம் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் சனத் பி.புஜிதா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சமூக தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து , புதிய கொரோனா நோயாளர்கள் கணிசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே கொவிட் -19 தடுப்பு நடவடிக்கையாக பரீட்சைகள் திணைக்களம் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: