யாழ்ப்பாண பொலிசார் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் – யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Tuesday, January 9th, 2024
யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு எதிராகவும், பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கையை யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.
“யாழில் பொலிஸாரின் நிர்வாக ஊழல்கள் அதிகரித்துள்ளன. மேலும் எவ்வித ஆதாரமுமின்றி சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் கைது நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறுகின்றன.
இவ்வாறு ஆதாரமற்று இடம்பெறும் கைது நடவடிக்கைகளை பொலிஸார் உடன் நிறுத்தவேண்டும்.
தமிழர்கள் அதிகளவில் வடக்கில் பரந்து வாழ்கின்றனர். தற்போதைய சூழலில் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன.
எனவே வடக்கு மாகாணத்தில் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.
நீதித்துறையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எனவே நீதி அரசர்களாக தகுதியுடைய தமிழ் நீதிபதிகளின் நியமனங்கள் இடம்பெறவேண்டும்.
இவ்வாறு பல்வேறுப்பட்ட விடயங்களை வலியுறுத்தி பதின்நான்கு பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளேன்” என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


