யாழ்ப்பாண பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்!

Monday, May 1st, 2017

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விடயத்தில் ஜனாதிபதியின் தெரிவு பல்கலைக்கழக செனட்சபையினுடைய சுயாதீன தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சி போல் அல்லாது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக கூறியே தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சி பீடமேறினர். இந் நிலையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பல்கலைக்கழக செனட்சபையின் வாக்கெடுப்பில் 2ஆவதாக வந்தவரை ஜனாதிபதி தேர்ந்தெடுத்துள்ளார்துணைவேந்தர் வாக்கெடுப்பு முடிவில் இரண்டாவதாக வந்தவருக்கும் முதலாவதாக வந்தவருக்கும் இடையில் கணிசமான வாக்கு வித்தியாசம் காணப்படுகின்றது. ஓரிரு வாக்குகள் வித்தியாசம் இருப்பின் ஜனாதிபதி இரண்டாவதாக வந்தவரை துணைவேந்தராக தெரிவு செய்திருப்பின் பரவாயில்லை.

ஆனால் கணிசமான வாக்குகள் வித்தியசாம் உள்ள நிலையில் முதலாவதாக வந்தவரை துணை வேந்தராக நியமிக்காததன் நோக்கம் என்னவென கேள்வியெழுகின்றது.இந்த விடயமானது கடந்த ஆட்சி போல் தற்போதைய ஆட்சியும் உள்ளதென்பதை காட்டுகின்றது. மேலும் இது யாழ்.பல்கலைக்கழக செனட் சபையினுடைய சுயாதீன தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்க்கின்றோம். வாக்கெடுப்பில் முதலாவதாக வந்தவரை தெரிவு செய்யாதது ஏன்? என்பதை ஜனாதிபதி கூற வேண்டும். பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சியாளர்கள் மாறினாலும் ஜனநாயகத்தை கடைபிடிப்பதற்கான தன்மையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது புலனாகின்றது,

Related posts: