யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியை வரவேற்றார் டக்ளஸ் தேவானந்தா!
Friday, September 9th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு இன்று (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களும் அதிகாரிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதனிடையே யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வுள்ளார் அதனைத் தொடர்ந்து தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


