யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

Sunday, September 3rd, 2023

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று(3) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

தேர்தல் அலுவலகத்தின் பெயர்ப்பலகையை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக்கா திரைநீக்கம் செய்ததுடன் கட்டடத்தின்  நினைவுக்கல் மற்றும் கட்டடத்தை   தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L ரத்நாயக்காவுடன் நிகழ்வில் கலந்துகொண்ட  தேர்தல் ஆணைக்குழுவின்  செயளாளர் ஹேரத் , தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களான பெரேரா மற்றும் பயீஸ் ஆகியோருடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழு சார்ந்த அதிகாரிகள் , யாழ் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் , பிரதேச செயளாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: