தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி – போராட்டத்தை கைவிடுட்னர் கடற்றொழிலாளர்கள் !

Friday, December 24th, 2021

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து, யாழ்.மாவட்ட மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டகாரர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகம் சில மணிநேரம் முடங்கியிருந்ததுடன் வீதியூடான போக்குவரத்து முடங்கியது.

இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வருகைதந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை. குறித்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி பலரும் பங்கேற்று இருந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்தபோது அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

பொதுப் பிரச்சினைகளில் ஒன்று படாத தமிழ் தரப்புக்களை நினைத்து போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: