யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!
Wednesday, March 29th, 2017
யாழ்.மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த வருடம் 267 மாணவர்கள் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் சித்திவீதம் நூறு வீதமாகவுள்ளதாகக் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.
எமது கல்லூரியில் க.பொ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அருளானந்தம் அபிநந்தன் தேசிய ரீதியில் ஐந்தாவது இடத்தினையும், தமிழ்மொழி மூலம் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 36 மாணவர்கள் 9 ஏ சித்தியும், 32 மாணவர்கள் 8 ஏ,பி சித்தியையும், 31 மாணவர்கள் ஏழு ஏ சித்தியையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து - குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
கடந்த மாதத்தில் 1063 டெங்கு நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு!
இலங்கை - ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!
|
|
|
சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்கள் எச்...
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் - பல்கலைக்கழக மானிய...


