யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி!
Thursday, April 2nd, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேலும் இருவருக்கு தற்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக அரசாங்கத்தினது அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாழ். போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்
Related posts:
பிணை முறிகள்: விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு!
அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
அரச நிறுவனங்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அம...
|
|
|


