யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை!
Wednesday, April 8th, 2020
யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர்களுக்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பதினெட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனாவைத்தியாசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் 20 பேருக்கும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவர்கள் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்களை வடக்கு மாகாணச சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Related posts:
பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர் - லக்ஷமன் யாப்பா!
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
|


