யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோம் – குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது !

Wednesday, June 26th, 2024

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவனைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய வேளை அவரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

யாழ் மாநகர சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுபினர் தர்சானந்தன் மதுபோதையில் ரகளை - முதல...
சுதந்திர தினத்தை கொண்டாடுவது அவசியம் - இல்லையெனில் சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாதவர்கள் என உல...
சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்து!