யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா தொற்றுக்க பலி!
Wednesday, August 11th, 2021
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு.!
பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் படுகாயம்!
உயர்தரப் பெறுபேறு: தீவகத்தில் வேலணை மத்திய கல்லூரி கலைப்பிரிவில் முன்னிலை!
|
|
|


