யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் சேவையை குழப்பும் அரசியல்வாதிகள் – நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, November 1st, 2022

பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் மக்களை தூண்டி விட்டுப் போராட்டம் செய்யும் நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (31.10.2022) இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற இருந்த மண்டபத்தில் அரசியல்வாதியுடன் உள் நுழைந்த சிலர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

நாம் யாழ்ப்பாணம் வந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையை பெற்று கொடுப்பதற்காகவே வந்தோம் அரசியல் செய்ய வரவில்லை.

மாவட்ட செயலகத்தில் இடம் பெறவிருந்த பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சிலர் செயல்பட்டமை தமது மக்களுக்கான சேவையை தட்டி பறிப்பதாகவே அமைகிறது.

ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்வதற்கு எவருக்கு உரிமை உள்ளது ஆனால் அதை பிழையான வழியில் சிலர் மக்களை தூண்டி விடுவது ஆரோக்கியமான அரசியல் செயற்பாட்டு அல்ல.

இந்தியாவிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை வந்தவர்களுக்கு நீதி அமைச்சர் நடமாடும் சேவை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து அதிகாரிகளை வரவழைத்தோம்.

இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கொழும்பு செல்லாமல் தமது தேவைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொள்வதற்காகவே நடமாடும் சேவையை ஏற்படுத்தினோம்.

இதை புரிந்து கொள்ளாத சிலர் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை குழப்புவது தமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: