இருதய நோயாளர்களுக்கு இலவச ‘ஸ்டென்ட்’  

Friday, September 30th, 2016

நாட்டிலுள்ள இருதய நோயாளர்களுக்கு ‘ஸ்டென்ட்’ (Stent )கருவிகளை இலவசமாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இருதய சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டென்ஸ் கருவியொன்றின் விலை 75,000 ரூபாவாகும் என்றும் முதற்கட்டமாக அரசாங்கம் 37 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வழிகாட்டலில் இலங்கையில் முதல் தடவையாக இந்த ‘ஸ்டென்ஸ்’ கருவி இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய சிகிச்சைக்கு உபயோகிக்கும் இக்கருவி நேற்றைய தினம் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அமைச்சிலிருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2017ம் ஆண்டுக்கான டென்ஸ்கள் சுகாதார அமைச்சினால் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இருதய நோய் நிபுணர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே மேற்படி கருவியை இலவசமாக வழங்குவதற்குத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார்.

முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர் இதற்கான நிதியைத் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சின் ஊழல் நிறைந்த டெண்டர் முறையை நிறுத்தியதில் மீதப்படுத்த முடிந்த நிதியிலேயே ‘ஸ்டென்ஸ்’ கருவிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

colcoronary-stenting-sub181103446_4823528_29092016_kaa_cmy

Related posts: