யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!

யாழ்பாணத்தில் வர்த்தகச்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்த 3 நாட்கள் வரை மூன்று நாட்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஒன்பதாவது முறையாக இந்த சர்வதேச வர்த்தகச்சந்தை ஆரம்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
300 இற்க மேற்பட்ட விற்பனை நிலையங்கள் கலந்துகொள்ள விருப்பதுடன் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.
இவற்றுள் உள்@ர் உற்ப்பத்திப்பொருட்களுக்கான கண்காட்சியும் இடம் பெற ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு கண்காட்சி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அமைச்சர் ராஜித தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
நடை பாதையில் உறங்கும் நோயாளர்கள் - இடப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் அவலநிலை!
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு!
|
|