அமைச்சர் ராஜித தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, June 11th, 2019
அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதிமோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய குடியுரிமையையும் பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அரசவைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைமை காரியாலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக மக்களுக்கு தெரிவிப்பதற்காக நாளைமுதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்புபோராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் செய்தி!
முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை 48....
ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
|
|
|
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின...
இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜா...
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்...


