யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, May 14th, 2024

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது, நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை அடுத்து, சிறைச்சாலைப் பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்யும் கால அவகாசம் நாளை நிறைவு!
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் - பருத்தித்துறை பிரதேச சபையின் ம...