யாழ்ப்பாணத்தில் இரு கிராமங்கள் உள்ளிட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

Thursday, June 24th, 2021

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி காவல்துறை பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதியும், மண்முனை காவல்துறை பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் பரீட்சைக்குத் தோற்றுவோரின் சந்தர்ப்பங்கள் பட்டதாரிகளால் இல்லாமற் செய்ய...
கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் - சீனாவின் ...
பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு...