யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம்!
Thursday, July 1st, 2021
இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு , யாழ் மாவட்ட மின்னியலாளர்கள் மற்றும் லயன்ஸ் கழகம் ,பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் சி.ஜெயசூரியன் தெரிவித்தார்
தற்போது நாட்டில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் முகமாக எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று 10 ஆவது முகாம் காலை 9.30 மணியிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. குறித்த இரத்ததான முகாமில் மின்னியலாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !
வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம்!
நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்க...
|
|
|


