யாழில் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Friday, July 5th, 2019
வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.
இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
Related posts:
பேருந்து கட்டணம் அதிகரிப்பால் சங்கங்களுக்கு இடையில் மாறுபட்ட கருத்து!
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஜனாதிபதி விசேட...
|
|
|


