25,000 ரூபா தண்டம்: உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு!

Saturday, August 12th, 2017

போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணமாக 25,000 ரூபாயை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்களுக்காக குறித்த இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அறிவிக்கப்பட்டது.மேலும், அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துதல், வயது குறைந்தோர் வாகனம் செலுத்துதல், இடது பக்கம் முன்னோக்கி செல்லல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர் சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: