யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

Thursday, February 14th, 2019

விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று இன்று மற்றும் நாளைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இடைக்கிடை ஏற்படக் கூடிய மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி செயலக படையணி மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களுடன் ஒன்றிணைந்து நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Related posts:


சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவ...
புதிய நாடாளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி - சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ஆலோசனை...
துருக்கி மற்றும் சிரியாவில் பேரனர்த்தம் –பலி எண்ணிக்கை 15,000 ஐ கடந்தது – மீட்பு பணிகளில் உலக நாடுகள...