யாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 22 பேர் கைது!

தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் நேற்று(06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இயங்குகின்ற குழுக்களுடன் குறைந்த வயதுடையவர்கள் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ஆம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தாஜுதீன் மரண பரிசோதனைக்கு அதிக காலம் தேவை - சட்ட மா அதிபர் திணைக்களம்!
கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
|
|