ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021

மாகாணசபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லையென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் தலைமையில், அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களின் திருத்த வேலைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். அனைத்து குளங்களும் திருத்தப்பட வேண்டும். குளங்களின் நிலப்பகுதிகள் சில மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

மேலும், கால்நடைகளுக்கு உணவு பிரச்சினை காணப்படுகின்றது. அதனை தீர்ப்பதற்கு என்ன செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

அத்துடன் மாகாண சபை நிதிகளை, சரியான முறையில் செலவழிப்பதில்லை. எனவே, மத்திய அரசாங்கம், மாகாணசபை, ஆளுநர் அலுவலகம் என்பன இணைந்து நிதி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.   இந்நிலையில் இருக்கும் நிதிகளை சரியான முறையில் செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: